Description
புத்தகக் குறிப்பு :
விருதுநகர் மாவட்டம் வாழவந்தான்புரம் கிராமத்தில் பிறந்தவர் ப. திருமாவேலன். கோயில்பட்டி இலக்குமி ஆலை மேனிலைப் பள்ளி, வ.உசி. அரசு மேனிலைப்பள்ளி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி கற்றார்.
விடுதலைக் குயில்கள், இனி, போர்வாள், குங்குமம், விகடன் பேப்பர், தமிழ் முரசு, தினகரன், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் ஆகிய இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றிய இவர், காட்சி ஊடகத்தில் முதன்மை ஆசிரியராக இருக்கிறார்.
‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? ‘காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்’, ‘காந்தியார் சாந்தியடைய’, ‘அரசியல்: நல்லகண்ணு – அ.மார்க்ஸ் விவாதம், ‘தேர்தல்-2009’, ‘கேட்டையின் கதை’, ”மனிதம் கொன்று மளம் தின்று ஈழம் இன்று’, ‘குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே ‘நீங்கள் எந்தப் பக்கம்? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு’, ‘நடக்கட்டும் நாக்கு வியாபாரம்’, ‘சுதேசி தேசம் சுரண்டப்பட்ட வரலாறு” ‘ஊழலுக்கு ஒன்பது வாசல்’, ‘பெரியோர்களே தாய்மார்களே’, ‘யாரைத்தான் எதிர்க்கவில்லை?’, ‘ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?’, ‘அவர்கள் அவர்களே’, ‘பண்டிதர் எஸ். எஸ். ஆனந்தரின் ‘தமிழ்நாடு’, ‘இவர் தமிழர் இல்லையென்றால் வேறு எவர் தமிழர்?’ ஆகிய நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் குறிப்பு:
அவதூறுகள் பேசுவதையே தமது இருப்பாகவும் எழுத்தாகவும் கொண்டுள்ள ஜெயமோகனுக்கு பதிலாகவும் வரலாற்றுண்மையை கண்டுணர முயற்சியேதும் செய்யாது அவரின் எழுத்துகளைப் படித்துப் பிதற்றும் முனை மழுங்கிய வாசகனுக்கும் ஒரு திறவுகோலாகவும் அமைந்துள்ளது இந்நூல். அதோடு மாற்றங்களுக்கென்று எப்போதும் தயாராக உள்ள தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமிக்க சமுகநீதி வாசகர்களுக்கான வரலாற்று பெட்டகமாக அமைந்துள்ள இந்நூலில், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் போர்க் குணமிக்க பங்களிப்பு மற்றும் அவரது சகாக்களின் வாயிலாக பெரியாரின் செயல்பாடுகள் குறித்த பேச்சுகள் மற்றும் எழுத்துகளை பட்டியலிட்டு பொய்களுக்கு பதில்களை அடுக்கியுள்ளார் தோழர் திருமாவேலன். வைக்கம் குறித்து தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இதழ்கள், நூல்களின் ஆவணக் குவியல்களிலிருந்து தேடியெடுத்து குறிப்புண்மையின் துணையோடு செழுமையான நூலாக, வாசிக்க அயற்சியற்ற மொழிப்பாங்கோடு திருமாவேலன் அவர்களால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்பதை வாசிக்கும் எவரும் உணர முடியும்.
Reviews
There are no reviews yet.