Description
நூல் குறிப்பு:
நெரிந்து கவிதைத் தொகுப்பின் மூலம் அறிமுகமான மதிவண்ணன் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். தலித்துகளுக்குள்ளும் மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் அருந்ததியர்களின் நிலையிலிருந்து தமிழ்ச் சமூக நிகழ்வுகளைக் கூர்மையாகப் பார்ப்பவர், விமர்சிப்பவர்; தலித்தியமென முன்வைக்கப்படக் கூடிய சில கருத்துகளின் மீதும் அவருக்குக் கூரிய பார்வைகள் கறாரான விமர்சனங்கள் உண்டு. இந்த வகையில் அயோத்திதாசப் பண்டிதரின் பார்வைகளுங்கூட பார்ப்பனியத் தன்மையுடையதாகவும் அருந்ததியர் உள்ளிட்ட பல தலித் பிரிவினரை இழிவு செய்வதாகவும் உள்ளன என்கிறார். பெரியாரை தலித்துகளின் எதிரியாகச் சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகாலப் பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறி கிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக் கூடியவை.
ஆசிரியர் குறிப்பு
கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைக் குதிரை’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
சரண்குமார் லிம்பாலே அவர்களின் ‘தலித் பார்ப்பனன்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ‘ஓலம்’ என்கிற நாவலையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் கொண்டு ஆவணங்களை உருவாக்கியவர்.
Reviews
There are no reviews yet.