Description
ஆசிரியர் குறிப்பு
லீனா மணிமேகலை சிறந்த தமிழ் கவிஞர். தமிழ்நாட்டின் விருதுநகரில் பிறந்தவர். ‘செங்கடல்’, ‘மாடத்தி’ ஆகிய தமிழ் திரைப்படங்களை எடுத்து திரைத்துறையில் இயக்குநராக முத்திரைப் பதித்தவர். ‘மாத்தம்மா’, ‘காளி’, ‘தேவதைகள்’, ‘பறை’ உள்ளிட்ட ஆவணத் திரைப்படங்களை சமூகத்தின் முன் வைத்துள்ளார். ‘ஒற்றையிலையென’, ‘உலகின் அழகிய முதல் பெண்’, ‘பரத்தையருள் ராணி’, ‘அந்தரக்கன்னி’, ‘சிச்சிலி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தற்போது கனடாவில் மேற்படிப்பு படித்து வருகிறார்.
நூல் குறிப்பு
தமிழின் விடுதலை தொன்மங்களையும், ஊற்றிலிருந்து பொத்துக் கொண்டுப் பீறிடும் நவீன கவிதையின் மொழி வளத்தையும் இணையாற்றல்களாய், பழமையை அடித்துச் செல்லும் பெருவெள்ளமாய் கொள்ளும் பின்னை நவீன பெண்ணிய வெளியொன்றை தனித்துவ சுயத்தோடு உருவாக்கிக் கொண்டவை கவிஞர் லீனா மணிமேகலையின் கவிதைகள்.
Reviews
There are no reviews yet.