Description
நூல் குறிப்பு:
சுந்தரராமசாமி நாவல்களுக்குள்ளிருக்கும் பார்ப்பனிய சாதிய, இந்துத்துவ வன்மங்களை அம்பலப்படுத்தும் இவ்வுரையாடல்கள், தமிழிலக்கியத்திற்கான சாதிய இருந்தலியத்தையும் எதிர்கொள்வதோடு, அயோத்திதாசரை திருவுருவாக்க முயல்வோரின் பிரச்சனைகளையும் நேர்த்தியாக விமர்சனப்பாங்கில் அணுக முயல்கிறது. ‘அருந்ததியர்’ என்கிற பண்பாட்டு அரசியல் ஓர்மையில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளில் தன்னுணர்வை சமூகத்திற்கு கடத்தும் ஆற்றலாக ‘நானும் என் படைப்புகளும்’ கட்டுரையையும் சாகித்திய அகாடமிக்காக ஆங்கிலத்தில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள ‘தமிழ் தலித் இலக்கியம் ஒரு தலித்திய பார்வை’ என்கிற இரு கட்டுரைகளைச் சொல்லாம்.
ஆசிரியர் குறிப்பு;
கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். வெள்ளைக் குதிரை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
சரண்குமார் லிம்பாலே அவர்களின் தலித் பார்ப்பனன் என்ற மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பையும் ஓலம் என்கிற நாவலையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
இருட்டடிக்கப்பட்ட அருந்ததிய மக்களின் வேர் கொண்ட இருப்பைப் பேசும் சக்கிலியர் வரலாறு எனும் ஆய்வு நூலை கல்வெட்டு, ஓலைச்சுவடி, இலக்கியப் பனுவல்களின் துணையோடு தமது 13 ஆண்டு கால ஆய்வுழைப்பில் உருவாக்கியுள்ளார்.
Reviews
There are no reviews yet.