Description

நூல் குறிப்பு:

நோயாளிகளின் உணவு பழக்கம் என்ன? உணவு நேரம் என்ன? புகை, மது பழக்கம் உண்டா? இருந்தால் தொடராதே என்று எந்த மருத்துவரும் வலியுறுத்துவதில்லை. மாறாக வேண்டுகோள் வைக்கிறார்கள்.
அதற்கு காரணம், அவ்வாறு வலியுறுத்தினால், நோயாளிகள் மருத்துவரை மாற்றிவிடுவார்கள். உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்பவன் என அப்பால் நாற்கூற்றே மருந்து என்ற குறள் அறியாமல் இருக்கிறோம்.
உணவே மருந்து மருந்தே உணவு என்பதுதான் இந்த நூலின் பேசு பொருள். ஆனால் நாகப்பன் அவர்கள் பல்வேறு ஆய்வு அறிக்கைகளின் மூலமும் புள்ளிவிவரக் கணக்குகளின் மூலமும் அதை நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லாமல் எடுத்து வைப்பது இந்த நூலில் சிறப்பு.
நம் வாழ்க்கைக்கு நேரடி தொடர்பில்லாத எத்தனையோ துறைகள் பற்றி எத்தனையோ புத்தகங்கள் படிக்கிறோம். ஆனால் நாம் தினசரி உண்ணும் உணவு பற்றி எத்தனை அறிந்திருக்கிறோம்? இப்புத்தகத்தின் மூலம் நூலாசிரியர் நாகப்பன் சூரிய நாராயணன் நமக்கு அந்த வாய்ப்பை சுவாரசியத்தோடு வழங்கியிருக்கிறார் என்பதுதான் இப்புத்தகத்தை முழுவதுமாய் நம்மைப் படித்து முடிக்க வைக்கிறது.
ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் அந்தக் கட்டுரை எழுத உதவிய மருத்துவ அறிக்கைகளையும் புத்தகப் பட்டியல்களையும் இணைத்து இருப்பது கூடுதல் சிறப்பு.
– இயக்குநர் கரு. பழனியப்பன்

ஆசிரியர் குறிப்பு:

திருநெல்வேலி முக்கூடல் அருகேயுள்ள பாப்பாகுடியில் பிறந்தவரான நாகப்பன் சூர்யநாராயணன் தமது இளங்கலைப் படிப்பை திருநெல்வேலிப் பேட்டை ம.தி.தா இந்துக் கல்லூரியிலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டதையும் பெற்றவர்.
ஞானச்சித்தர் எத்திராஜ் அவர்களினால் இயற்கை உணவுமுறைக்கு மாறியவர். 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஊட்டச்சத்து அறிவியல் (Nutrition) சான்றிதழையும், நியூயார்க் மாநிலத்தின் ஈகார்நெல் (cornel) பல்கலைக் கழகத்தின் மூலம் டாக்டர் காலின் கேம்பல் வகுத்தளித்த தாவர அடிப்படையிலான உணவுமுறை (Plant-Based Nutrition) சான்றிதழையும் பெற்றுள்ளார்.
பல்வேறு உடல் நலப் பிரச்சினை கொண்டவர்களுக்கு உடல்நலம் தொடர்பான 5000 மணி நேரத்திற்கும் மேற்பட்ட ஆலோசனைகளை அளித்து (Counselling) அமெரிக்காவில் சுயதொழில் (Freelance) கிளினிகல் நியூட்ரினிஸ்ட் ஆக பணியாற்றுகிறார்.
ஆய்வுகள் அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உணவுமுறைகளை பரிந்துரைக்கும் பணியில் தமிழ்நாடு மற்றும் அமெரிக்காவில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நியூஜெர்ஸியில் உள்ள யூனியனில் துணைவி லெஷ்மிதேவி, மகள் நிலாவுடன் வசித்து வருகிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நோய்க்கு இடம் கொடேல்”

Your email address will not be published. Required fields are marked *