Description
நூல் குறிப்பு:
நயவஞ்சகத் தன்மையை ஒரு நாகரிகமாக நிலை நிறுத்திவிட்ட இந்து சாதிய சமூகத்திலிருந்து விடுதலை எத்தனம் கொண்ட எதிர்ப்பையும் அதன் தகிப்பையும் தமது இருப்பாக வெளிப்படுத்திக் கொள்ளும் இந்த நெரிந்து கவிதைத் தொகுப்பின் மொழியின் உட்கிடக்கையிலும் வெளிப்பாட்டுத் தன்மையிலும் உள்ளடக்க கவிகட்டுமான அமைப்பிலும் இத்தொகுப்பு வெளிவந்து இருபத்திரண்டு ஆண்டுக் கால நிலையிலும் இன்னும் கூட ஒரு தலித் கவிதைத் தொகுப்பும் வரவில்லை என்பதை வாசிப்பின் துணிவிலிருந்து கூறுகிறேன். அதன் போர்க்குணமிக்க கவிதையியல் தன்மைதான் நெரிந்துவை இன்னும் உயிர்த்துடிப்போடும் உலவும் தேவையையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆசிரியர் குறிப்பு
கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைக் குதிரை’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
சரண்குமார் லிம்பாலே அவர்களின் ‘தலித் பார்ப்பனன்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ‘ஓலம்’ என்கிற நாவலையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் கொண்டு ஆவணங்களை உருவாக்கியவர்.
Reviews
There are no reviews yet.