Availability: In Stock

ஆலய நிர்வாகமும் பார்ப்பனர்களும்

35.00

Description

நூல் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை உலகெங்கும் கடத்தி விற்று கோடிக்கணக்கான பணத்தை வாரி சுருட்டிப் பிழைத்துவரும் இந்துப் பெரும்பான்மையாக ஆலய நிர்வாகத்திலிருந்து வரும் பார்ப்பனர்களும் அதே ஜாதியைச் சேர்ந்த தொழில்துறையினரும் அம்பலப்பட்டு வரும் இந்தக் காலத்தில், மன்னராட்சி காலங்களிலும் ஆலய நிர்வாகத்திலிருந்து பார்ப்பனர்கள் கோவில் சொத்துகளை எப்படி வகை வகையாக திருடித் தின்றனர், கொள்ளையடித்தனர் என்பது பற்றி கல்வெட்டு ஆதாரங்களையும் ஆவணங்களையும் முன்னிறுத்தி கவிஞர் மதிவண்ணன் எழுதிய ஆய்வுக்குறு நூல் இது.

ஆசிரியர் குறிப்பு

கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைக் குதிரை’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

சரண்குமார் லிம்பாலே அவர்களின் ‘தலித் பார்ப்பனன்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ‘ஓலம்’ என்கிற நாவலையும்  தமிழாக்கம் செய்துள்ளார்.

அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் கொண்டு ஆவணங்களை உருவாக்கியவர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆலய நிர்வாகமும் பார்ப்பனர்களும்”

Your email address will not be published. Required fields are marked *