Description

ஆசிரியர் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை கிராமத்தில் 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தவர் டானியல் ஆன்டனி. யாழ் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் உதைபந்தாட்ட முன்னணி வீரராகத் திகழ்ந்தார். உப தபால் அதிபராக பணியாற்றிய இவர் இலக்கிய தளங்களிலும் தீவிரமாக பணியாற்றியவர். இவரது இலக்கிய வழிகாட்டி பேராசிரியர் கைலாசபதி. இவர் உடல் நலக்குறைவால் 1994 ஆம் ஆண்டு மறைந்தார்.

நூல் குறிப்பு

டானியல் அன்ரனியின் கதையுலகம் விளிம்புநிலை மக்களின் உலகமே. நெய்தல் நிலத்தின் மகனான அவரின் கதைகளில் கடலும், நெய்தல் மக்களின் பண்பாடும், நெய்தல் வட்டார மொழியும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. கடுமையான உழைப்பாளர்களான கடல் தொழிலாளர்களின் வறுமையையும், முதலாளிகளான சம்மாட்டிகளால் அவர்கள் ஒட்ட வறுகப்படுவதையும், கொத்தடிமைகளாக மாற்றப்படுவதையும் மட்டுமல்லாமல்; இந்தத் தொழிலாளர்களைக் கடவுளின் பெயரால் கத்தோலிக்கத் திருச்சபையும், இல்லாத கடவுளுக்குத் தசமபாக காணிக்கை கேட்டுக் கள்ளப் பாதிரிகளும் கரண்டுவதையும் நேரடிச் சாட்சியமாக நின்று டானியல் அன்ரனி எழுதிக் காட்டியிருக்கிறார்

  • எழுத்தாளர் ஷோபாசக்தி

Reviews

There are no reviews yet.

Be the first to review “டானியல் அன்ரனி”

Your email address will not be published. Required fields are marked *