Description
நூல் குறிப்பு:
ஷோபாசக்தி:
புலி அரசியலை முற்றாக ஈழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடமும் அற்றுப்போகச் செய்ய வேண்டும். அந்த வெற்றிடத்திலிருந்து புதிய அரசியல் வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். வெல்வதற்கு மட்டுமல்ல. நாம் இழப்பதற்கும் நிறைய இருக்கிறது என்ற பக்குவத்துடனும் முதிர்ச்சியுடனும் நாம் இனி ஈழப் பிரச்சினையை அணுக வேண்டும். நமது அரசியல் வழிமுறையும் போராட்டமும் இம்மியளவும் மனிதவுரிமைகளுக்கோ சனநாயக நெறிகளுக்கோ மாறுபடாதிருக்க வேண்டும் என்ற உறுதியை நமது மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். விடுதலை மகத்தானது. அதைவிட ஆயிரம் மடங்கு மகத்துவமானது நமது சக மனிதனின் உயிர்!
தியாகு:
நான் புலிகள் என்று மறுபடியும், மறுபடியும் சொல்வது தனித் தமிழீழம், அதற்கான போராட்டம் என்ற அர்த்தத்தில்தான் சொல்கிறேனே தவிர, அதேபோலவே இராணுவம் அமைக்க வேண்டும், அதேபோல தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று அல்ல. அவற்றை முன்கூட்டி நிராகரிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். அவர்களே கடைசியில் ‘நாங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று சொன்ன பிறகு இப்போது எப்படி ஆயுதங்களை எடுக்க முடியும்? ஆனால் சிலபேர் சொல்வது மாதிரி. ‘அதுதான் இறுதிக் கட்டளை. இனிமேல் ஆயுதங்களையே எடுக்கக்கூடாது என்று புரிந்துகொண்டால் அது தவறு. அது அந்த நெருக்கடிச் சூழலுக்கு எடுக்கப்பட்ட முடிவு
Reviews
There are no reviews yet.