Description

ஆசிரியர் குறிப்பு

இந்திய அளவில் குறிப்பிடத்தகுந்த அறிவாளிகளில் முதன்மையானர் ஆனந்த் டெல்டும்டே. மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஊடகத்தால் இருட்டடிப்பு செய்ய முடியாத ஆற்றல்மிகு எழுத்தாளர். மனித உரிமை செயல்பாட்டாளர்.  தலித் விடுதலைக்காக அயராது போராடும் மார்க்சிய சிந்தனையாளரான ஆனந்த் டெல்டும்டே, இடதுசாரி மற்றும் அம்பேத்கரிய இயக்கங்களிடையே நேர்மறையான உரையாடலை இடையறாது நிகழ்த்தி வருபவர்.  இவர் அண்ணல் அம்பேத்கரின் மகள் வழி பேத்தி ரமா அவர்களின் கணவர் ஆவார்.

நூல் குறிப்பு

இந்துப் பண்பாடு, முழு அண்டமும் ஒரு குடும்பம் என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே சமூகத்தை எண்ணற்ற சாதிகளாகத் துண்டாக்கியுள்ளது. இந்தப் பண்பாடு அகிம்சையை விழுமியமாகக் கற்பித்துக் கொண்டே கருவி ஏந்திய கடவுள்களின் வழிபாட்டின் மூலமாகத் தன்னைத்தான் ஒழுங்கு செய்து கொள்ளும் வன்முறையை அன்றாட வாழ்வில் உறுதி செய்கிறது.

நாம் கயர்லாஞ்சியை விரும்பத்தக்கதொரு நிகழ்வாக, ஒரு பிறழ்ச்சியாக, ஏதாவது ஒரு குழப்பமான நீதிமன்றத்தில் ஒரு மறந்து போன வழக்காக நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சாதிய மரம் புறம் தந்துள்ள இந்த விசித்திரக் கனியை உலகம் அறிய வேண்டும். அந்த மரம் தனது இலைகளிலும் வேரிலும் குருதி தோய்ந்து இருப்பதாகும். இந்நூல் எரியும் தசைகளின் திடீர் வாடையை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு மாறுபட்ட, கசப்பான வழித் தடத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறது.

  • இந்நூலின் ஆங்கில பதிப்பிற்கான முன்னுரையில் ஆனந்த் டெல்டும்டே

Reviews

There are no reviews yet.

Be the first to review “கயர்லாஞ்சி படுகொலையும் அநீதியும்”

Your email address will not be published. Required fields are marked *