Description

புத்தகக் குறிப்பு :

சமூக நீதிக்கான நெடும்பயணத்தில் அடிப்படை உரிமையான ‘உள் இடஒதுக்கீட்டை’ கோரிக்கையாகவும் பிரச்சாரமாகவும் நிகழ்த்தி அருந்ததியர்கள் தங்களது இலக்கை அடைய வைத்த முக்கிய நூலிது.

ஆந்திர மாநிலத்தில் உள்ஒதுக்கீட்டிற்காக மாதிகாக்கள் நடத்திய ‘தண்டோரா இயக்க’ செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் மொழி பெயர்த்துள்ள இந்நூலாசிரியர் கவிஞர் மதிவண்ணன் தமிழில் உள்ஒதுக்கீட்டிற்கான தேவைகளையும் நியாயங்களையும் அதை எதிர்ப்பவர்களின் சாதிய மனோபாவங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

சமூக நீதியின் வேரோடிய மண்ணிலிருந்து இன்னமும் வரலாற்றெழுதிகளாலும் ‘தலித் பார்ப்பனர்’களாலும் புறக்கணிக்கப்படும் அருந்ததியர்களோடு கருத்தொருமித்து கைக்கோர்க்கும் கடமையாக கருப்புப் பிரதிகள் இப்பிரதியை மறுபடியும், மறுபடியும் சமூகத்தின் முன் வைக்க விரும்புகிறது.

 

ஆசிரியர் குறிப்பு:

கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். வெள்ளைக் குதிரை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

சரண்குமார் லிம்பாலே அவர்களின் தலித் பார்ப்பனன் என்ற மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பையும் ஓலம் என்கிற நாவலையும் தமிழக்கம் தமிழாக்கம் செய்துள்ளார்.

இருட்டடிக்கப்பட்ட அருந்ததிய மக்களின் வேர் கொண்ட இருப்பைப் பேசும் சக்கிலியர் வரலாறு எனும் ஆய்வு நூலை கல்வெட்டு, ஓலைச்சுவடி, இலக்கியப் பனுவல்களின் துணையோடு தமது 13 ஆண்டு கால ஆய்வுழைப்பில் உருவாக்கியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உள் ஒதுக்கீடு சில பார்வைகள்”

Your email address will not be published. Required fields are marked *