Description

புத்தகக் குறிப்பு :

இலங்கையைக் கடவுள் படைத்தார். இந்தச் சிறையை பிரிட்டிஷ்காரர்கள் படைத்தார்கள். இதுவரையான இலங்கை வரலாற்றிலேயே அதிக வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் பெண் நான்தான். விடுதலையாகி வெளியே வரும்போது எனக்கு முந்நூற்று இருபத்தியிரண்டு வயதாகியிருக்கும். சுக்கிராச்சாரியாரின் சாபத்தால் முதுமையடைந்த யயாதிக்கு அவனின் மகன் புரு தனது இளமையைத் தானமாகக் கொடுத்ததுபோல, நான் விடுதலையாகி வரும்போது உங்களின் இளமையை எனக்குத் தானமாகத் தரப்போவது உங்களில் எவர்? ஒரேயொரு நாள் இளமை மட்டுமே எனக்குத் தேவை!

 

ஆசிரியர் குறிப்பு:

ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர்.

சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.

நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இச்சா”

Your email address will not be published. Required fields are marked *