Description

புத்தகக் குறிப்பு :

ஆண் மையங்கொள்ளாமல் பெண் இருப்பை அதன் வாழ்முறை அவதியை, யதார்த்தவாத அழகியலின் வசீகரம் குன்றாத மொழியில் பக்கத்திலிருந்து வதியும் மானிட இருப்பை நேர்மையாக புனைவாக்கி நம்முன் வைத்துள்ள இந்த ‘ஆண்பால் உலகு அருந்ததியின் முதல் நாவல்.

 

ஆசிரியர் குறிப்பு:

வடஇலங்கையின் யாழ்ப்பாணக் கடற்கரை கிராமமான நாவாந் துறையில் பிறந்த அருளானந்தராஜா என்கிற இயற்பெயரைக் கொண்ட எழுத்தாளர் அருந்ததி. அங்கு உயர்தர வகுப்புக்கான 2 அளவையியல் ஆசிரியராக பணிபுரிந்தவர்.

மேடை நாடகங்களை எழுதி இயக்கியதோடு 1984-இல் புலம் பெயர்ந்து அகதியாக பிரான்சில் தஞ்சமடைந்து வாழும் தற்போதைய சூழல் வரை தொடர்ந்து படைப்பிலக்கிய தளத்திலும், திரைப்படக் கலையிலும் ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் ‘பரிணாமம்’, ‘வியாபகம்’, ‘கருதுகோள்’. ‘இன்னொரு மனிதன்’ ஆகிய நாடகங்களை அரங்கேற்றியுள்ள அருந்ததி, ‘சமாதானத்தின் பகைவர்கள்’. ‘இரண்டாவது பிறப்பு’. ‘கடல்’ ஆகிய மூன்று கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளதோடு, ‘முகம்’ என்கிற முக்கிய திரைப்படம் ஒன்றையும் எழுதி இயக்கியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆண்பால் உலகு”

Your email address will not be published. Required fields are marked *