Description
புத்தகக் குறிப்பு :
திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருந்தல் நூல் காட்டும் எண்ணற்ற சான்றுகள் நூலாசிரியரின் ஆழ்ந்த படிப்பையும், கடும் உழைப்பையும் நமக்குணர்த்துகின்றன ஒரு பக்கச் சார்புடையனவாக அல்லாமல் எல்லாத் தரப்பிலிருந்தும் தரவுகள் தரப்பட்டுள்ளன. இந்த ஒரு நூலைப் படித்து முடிக்கும் போது பல நூல்களைப் படித்த உணர்வு நமக்குள் எழுகிறது.
திராவிட இயக்க ஒவ்வாமை நோயினர் மீது மட்டுமன்றி, திராவிட இயக்கத் தலைவர்கள் மீதும் கூட அவருடைய கேலிகளும், கிண்டல்களும் சிலவிடங்களில் தலைநீட்டுகின்றன. கலைஞர் குறித்தும் அதுபோன்ற சில குறிப்புகள் காணப்படுகின்றன. மானுட வாழ்வில் மதவெளியின் வகிபாகத்தை மறுதலிக்கும் பகுத்தறிவின் பயங்காரவாத மரபு போன்ற நமக்கு உடன்பாடில்லாத வரிகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. இதனை நூலின் பதிப்பாசிரியர் நீலகண்டனே தன் பதிப்புரையில் குறிப்பிட்டு மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும் விரிந்து பரந்த தளங்களில் உரிய ஆவணங்கள் பலவற்றை முன்வைத்துள்ள அறிவாளர்கள் படிக்க வேண்டிய அரியநூல் இதென்பதை யாரும் மறுப்பதில்லை.
– சுப வீரபாண்டியன் ‘கருஞ்சட்டைத் தமிழர்’
ஆசிரியர் குறிப்பு:
நெல்லை வீரவ நல்லூரில் 1949 ஆம் ஆண்டில் பிறந்த நூலாசிரியர் பொதியவெற்பன், தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர். சிலிக்குயில் பதிப்பகத்தை நடத்தி வந்த இவர், ‘தோழமை’யின் பதிப்பாசிரியராகவும் சிற்றிதழ் மரபில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ‘நிறப்பிரிகை’ இதழின் வெளியீட்டாளராகவும் செயல்பட்டவர்.
தொடக்க காலத்தில் ‘தமிழ் மாணவர் கழகம்’, ‘திராவிட மாணவர் கழகம்’, ‘பகுத்தறிவாளர் கழகம், ‘தமிழிசை இயக்கம்’, ‘தமிழியக்கம்’, ‘ஓர்மை’, ‘இலக்கு’, ‘தமுஎகச’, ‘உதக, ‘புபஇ ஆகிய அமைப்புகளில் இயக்கப் பணியாற்றியவர்.
1970இல் நெல்லை ‘தனித் தமிழ் இலக்கியக் கழகமும், 2006இல் சேலம் கேஆர்ஜிஎன்ஆர் அறக்கட்டளை’யும், 2009இல் ஏர்வாடி ‘களரியும், 2018 இல் ‘சென்னை சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை’யும் விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளன.
தற்போது கோவையில் தனது துணைவியாருடன் வசித்துவரும் திரு பொதியவெற்பனுக்கு மகளும், மகனும் உள்ளனர்.
Reviews
There are no reviews yet.