Description
நூல் குறிப்பு:
தமிழகம் எதிர்கொண்டிருக்கும் இந்த அறம் சார்ந்த, அறிவு சார்ந்த வீழ்ச்சிதான் நூலாசிரியர் தோழர் குமரன்தாஸின் கவலை “ஒவ்வொரு நாடும் தான் பெறுவதற்குத் தகுதியான பாசிசத்தையே பெறுகிறது” (Every country gets the fascism it deserves) என்பார் மறைந்த மார்க்சிய ஆய்வறிஞர் அய்ஜாஸ் அகமது இக்கூற்று பார்ப்பன பாசிசத்துக்கு மட்டுமின்றி, அதன் விழுதாக இறங்கியிருக்கும் சீமானிய தமிழ்த்தேசியத்துக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டாக உருவாகி வளர்ந்திருக்கும் பார்ப்பனரல்லாதார் என்கிற அரசியல் ஓர்மையைச் சிதைக்கின்ற புறக்காரணிகளைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், இம்முயற்சியில் பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்றும் ஓருயிர் மூவுடல்களாகச் செயல்படுவதையும், திமுக எதிர்ப்பு என்பது ஒருவகை சாதி ஆதிக்க மனநிலையிலிருந்து ஊற்றெடுக்கிறது என்பதையும் கவனப்படுத்துகிறார். அதிமுகவும் ஒரு திராவிட இயக்கமே என்று சாதித்து வரும் அறிவுத்துறையினரும் ஊடகவியலாளர்களும் இயக்கத்தினரும்தான் சிந்திக்க வேண்டும். இப்போதும் சிந்திக்க மறுப்பவர்கள் நடைமுறையில் பார்ப்பன பாசிசத்துக்குத்தான் வலுச்சேர்க்கிறார்கள்.
தோழர். மருதையன்
ஆசிரியர் குறிப்பு:
ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த குமரன்தாஸ், 16 வயதில் மூடநம்பிக்கைக்கு தனது தாயை பலி கொடுத்த துயரத்திலிருந்தே பகுத்தறிவு உணர்வை பெறத் தொடங்கினார். 80களில் பள்ளியாசிரியர் மூலம் மார்க்சிய லெனினியக் குழுக்களின் அறிமுகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய மக்கள் முன்னணியின் ஆதரவாளராக இருந்துள்ளார். பின்னர், இன்குலாப். இளவேனில், அ. மார்க்ஸ், கோ.கேசவன் ஆகியோரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, மா.லெ. குழுவில் இருந்து விலகி சமூக விஞ்ஞான பயிலகம் என்கிற பெயரில் நண்பர்களுடன் இணைந்து செயற்பட்டு ‘பகிர்வு’ எனும் சிற்றிதழை நடத்தியுள்ளார்.






Reviews
There are no reviews yet.