Description
இந்தியப் பொதுவெளியில் அறவொழுக்க பிதாமகர்களாக இந்துக்களாலும் இன்றைய இந்துத்துவவாதிகளாலும் முன் வைக்கப்படும் இதிகாச நாயகர்களான ராமனையும் கிருஷ்ணனையும் தமது தர்க்கங்களால் அண்ணல் அம்பேத்கர் உடைத்தெறியும் மிக முக்கிய பிரதி இது. வியாசனும் வால்மீகியும் எழுதி வைத்த மூலமொழியின் வாசிப்பின் அடிப்படையில் அண்ணல் அம்பேத்கர் இதில் ஒன்றுமில்லை என பிய்த்துப் போட்டு உலகிற்கு அறிவித்த பிரதி இது.
மனிதகுல முன்மாதிரிகளாக வைக்கத் தகுதியற்ற பார்ப்பனிய, ஆண் மையவாதத் துருப்பிடித்த இத்திரு உருக்களை எதிர்த்தும் எரித்தும் விமர்சித்தும் விலக்கி வைத்தும் வருகின்ற எதிர் கலாசார செழுமை மிக்க தமிழ்நாட்டின் மண்ணிலிருந்து நமது கருத்தை மேலும் வலிமைப்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் போக்கிலும் இப்பிரதியை மக்கள் முன்பு மீண்டும் மீண்டும் கருப்புப் பிரதிகள் முன்வைக்க விரும்புகிறது.
Reviews
There are no reviews yet.