Description
ஆசிரியர் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் நாவாந்துறையில் பிறந்த டானியல் ஜெயந்தனின் இயற்பெயர் டானியல் அன்ரனி ஜெயந்தன். மனைவி சாலினி பிள்ளைகள் சமரன் மற்றும் ஏரன். தாயார் செல்வதி. தந்தையார் இலங்கை தமிழ் எழுத்தாளரான டானியல் அன்ரனி. 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த டானியல் ஜெயந்தன், சென் சேவியர் கல்லூரியில் படித்து தொழில் நிமித்தமாக டோகா சென்று பின்னர் பிரான்ஸ் நாட்டில் குடியேறி அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நூல் குறிப்பு
டானியல் ஜெயந்தன், வாழ்க்கை சார்ந்து என்ன புரிதலை வைத்திருக்கிறார் என்பதிலிருந்தே அவர் உருவாக்கும் புனைவின் உள்ளீடு அடர்த்தி கொண்டு வெளிக் கொள்ளும். டானியல் ஜெயந்தனின் கதைகளை வாசித்து முடித்தவுடன், எது இத்தனை வேகமாகப் படிக்க வைக்க இயல்கின்றது என்று யோசித்துப் பார்த்தால், அவரது சித்தரிப்புகள் மிகுந்த நடை என்றே தோன்றுகின்றது. மனிதர்களின் அசைவுகள் மீதான கூர்மையான அவதானங்கள் தேர்ந்த வாக்கியங்களுடன் ஒலிக்கின்றன. டானியல் ஜெயந்தனின் கதை மாந்தர்கள் கத்தோலிக்க இறைநம்பிக்கை படிந்த சிற்றூர்களில் இருந்து புலம்பெயர்ந்து பாரிஸ் தெருக்களில் உலாவும் சாமானியர்கள். அவர்களின் கற்பனைகளும், பகல் கனவுகளும் அவர்களின் பிறப்பிடங்களின் நினைவுகளுடன் தொடர்புடையது. சில நினைவுகள் பிரான்ஸ் போர்தோ ஒயினுடன் பிணைந்து வர்ணங்கள் கலவையாக மிகுந்த பிரான்ஸ் பட்டணங்களுடன் உலாவருகின்றன.
- அனோஜன் பாலகிருஷ்ணன்
Reviews
There are no reviews yet.