Description
ஆசிரியர் குறிப்பு
1991 இல் கிழக்கிலங்கை மட்டக்களப்பில் பிறந்தவரான கவிஞர் மின்ஹா வின்சன்ட் தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர். சிறிய வயதிலிருந்து வாசிப்பின் மீதும் கவிதைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பல மின்னிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. உளவியல் துறையில் பயின்றுள்ளார். ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். சமூக விஞ்ஞானம், தத்துவம், வரலாறு, கலைத்துறை சார்ந்த தீவிரத் தேடலும் ஆர்வமும் கொண்டவர்.
இது இவரது மூன்றாவது தொகுப்பு. முந்தைய கவிதைத் தொகுதிகளாக ‘நாங்கூழ்’, ‘கடல் காற்று கங்குல்’ என்பன வெளிவந்துள்ளன. நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் மிகக்குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பையும் வாசிப்பின் அடிப்படையிலான வாசக தன்னெழுச்சி அறிமுக மதிப்புரைக் குறிப்புகளை மிகப் பரவலான வரவேற்பை பெற்றவை மின்ஹாவின் கவிதைகள்.
நூல் குறிப்பு
பொதுப்புத்தியில் இருந்து விலக விரும்பும் தனிமையும், அந்தரங்கமான உரையாடல்களால் கட்டமைக்கும் பிரத்தியேகமான மொழியால் ஆன வெளியிலும் இந்த கவிதைகள் தம்மை வளர்த்துக் கொள்கின்றன எனலாம். இருத்தல் சார்ந்த பார்வைகள், அதன் நேர்த்தி சார்ந்த ஓர்மைகள் இவற்றில் இருந்து விடுபட எத்தனிக்கும் அல்லது சேர்ந்தொழுக நேர்கையில் அடையும் மன நெருக்கடிகள் சமயங்களில் பாடு பொருட்கள் ஆகின்றன. அந்தந்த நேரத்து வலிகள் கோரும் சொற் கோர்வைகளை மனந்திறந்து தன் கவிதைகளில் அனுமதித்திக்கிறார் ஆசிரியர்.
Reviews
There are no reviews yet.