Description

நூல் குறிப்பு:

நம் நினைவில் கரைபுரளும் ஈழப்போராட்டங்கள் கட்டமைத்த புனித கதையாக்க வெளிகளிலிருந்து ‘விலக்கி வைக்கப்பட்ட கனிகள்’ போன்றவை மெலிஞ்சி முத்தனுடைய இச்சிறுகதைகள்.

மனித இருப்பின் பாடுகள் மிகவும் பொறுப்பற்று அணுகப்படும் ஈழம், தமிழகம், புலம்பெயர்ச் சூழலில், எவ்வித திருவுருக்களிடமும் பெருங்கதைகளிடமும் பலி கொடாமல் சொல்லப்பட்டுள்ள இக்கதைகளில், சக உயிரிகளின் வாழ்வு அக்கறையோடும், மனிதார்த்தங்களின் அழகியலோடும் உயிர்த்து திரிவதை வாசகர்கள் உணரலாம்.

ஆசிரியர் குறிப்பு:

இலங்கை மெலிஞ்சிமுனை,  ஊர்காவற்றுறையில் விஜயநாதன்-கார்மெலா ஆகியோருக்கு மகனாக பிறந்த மெலிஞ்சி முத்தனின் இயற்பெயர் யூஜின் மசனெட்.

2000 இல் இருந்து நாடக, கூத்து, வில்லிசை, கவிதை பிரதிகளை எழுதியிருந்தாலும் கனடா வந்த பின்னர் எழுதிய பிரதிகளாலேயே அறியப்படுகிறார்.

‘முட்களின் இடுக்கில்’, ‘வேருலகு’, ‘பிரண்டையாறு’, ‘அத்தாங்கு’, ‘உடக்கு’, ‘காந்தப்புலம்’, ‘நுளம்புத்திரிப் பாதை’ ஆகிய இலக்கியப் பிரதிகளை எழுதியுள்ளார்.

கனடாவின் அரங்குகளில் புலம்பெயர் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் பண்பாட்டு, உளவியல் , சிக்கல்களை ஆராயும் ஈழக் கூத்துக்களையும், நாடகங்களையும் அரங்கேற்றி வருகிறார்.

2006 இல் இருந்து கனடாவில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “பிரண்டையாறு”

Your email address will not be published. Required fields are marked *