Description
ஆசிரியர் குறிப்பு
மரண கானா விஜி மெரினா கடற்கரையில் பெற்றோர்களால் கைவிடப்பட்டவர். வளரும் பருவத்தில் சென்னையின் பாடலான கானா பாடல்களை எழுத, பாட தேர்ந்தார். நான் சந்தித்த மரணங்கள் என்ற நூலை எழுதிய பின்னர் தமிழ் நாட்டில் பரவலாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து திரைத்துறையில் பின்னணி பாடகராகவும், கானா பாடல் ஆசிரியராகவும் திகழ்கிறார்.
நூல் குறிப்பு
நகர வாழ்வின் விளிம்பு மனிதனின் உதிரிக் கதையாடலை எவரும் முன்வைக்காத ‘மொழியில்’ சொல்லத் துணிந்திருக்கிறார் மரண கானா விஜி இலக்கியமென எழுதிக் குவிக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட சொற்குவியல்களை அப்புறப்படுத்தவோ, அல்லது அவற்றை உருவாக்கிய மனிதர்களுக்கு குற்றவுணர்வையோ ஏற்படுத்தக் கூடியது விஜியின் அனுபவங்கள் எழுத்ததிகாரத்திற்குள் சிக்கிக் கொள்ளாத, புனைவுகளற்ற வாய்மொழி வரலாற்றின் அச்சு அசலான கச்சாப் பிரதி இது என்றால் மிகையாகாது.
Reviews
There are no reviews yet.