Description
நூல் குறிப்பு:
துயரத்தைக் கவிதைகள் சொல்லும்போது அது ரசிக்கத்தக்க கண்ணீர்த் துளியாகி விடுகிறது; மென்மை பொருந்திய பனிக்கட்டியாக உறைகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளும் அப்படித்தான். உள்ளும் புறமுமான துயரத்தை தனிமை வெளியில் நின்று சதா பேசுகின்றன. நாம் மெல்ல மெல்லக் கடந்து மறந்திருக்கும் பெருந்தொற்றுப் பொழுதுகளை இந்தக் கவிதைகள் நினைவு படுத்தும்போது நம் மீது ஒரு கனத்த இருள் கவிகிறது. கைவிடப்பட்ட காதலும் கைவிடாத கடலும் இந்தக் கவிதைகளுக்குள் சத்தமெழுப்பிக் கொண்டேயிருக்கின்றன. நவீன இணைய யுக கணங்களின் பின்னணியில், மாறி வரும் உறவுகளையும் மாறாத உணர்வுகளையும் சொல்லும் இந்தக் கவிதைகளில் நாம் எல்லோருமே இருக்கிறோம்.
கவிஞர் சுகுணா திவாகர்






Reviews
There are no reviews yet.