Description

ஆசிரியர் குறிப்பு

1962 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த விழி.பா. இதயவேந்தனின் இயற்பெயர் அண்ணாதுரை. விழுப்புரம் நகராட்சியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 80களின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கிய அவர் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் என முப்பது நூல்களை எழுதியுள்ளார். நெம்புகோல், வானவில், ஞாயிறு, மருதம் ஆகிய அமைப்புகளோடு இணைந்து இலக்கிய, அரசியல் செயல்பாட்டில் ஈடுபட்டவர். சிறுநீரக செயலிழப்பால் அவதியுற்ற அவர் தனது 60 ஆவது வயதில் 2022 ஆண்டு இயற்கை எய்தினார்.

நூல் குறிப்பு

“அனுபவ மண்ணில் வேர் பாய்ச்சி, அழகியல் வானில் கிளை பரப்புவதாலேயே இதயவேந்தனுடைய எழுத்துகளை நாங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம்

– பேராசிரியர் கவிஞர் த. பழமலய், விழுப்புரம்

“தங்களது உழைப்பு ஒருபுறம் இருப்பினும் சிறிய கலை இலக்கியக் கொள்கையுடன் படைப்பாற்றலை மேன்மேலும் செம்மைப்படுத்தி வருகிறீர்கள். படைப்புகளுக்கு மெருகேற்றி ஒளி கூட்டி வருகிறீர்கள். இவை எல்லாம் சுமார் 20 ஆண்டு இடையறா முயற்சிகளின் விளைவு என்றே கருதுகிறேன்.”

  • தி.க. சிவசங்கரன், திருநெல்வேலி

விழி.பா. இதயவேந்தனின் கதை உலகம் வசதியாக சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு கதை படிப்பவர்களின் உள் உலகங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவர்களின் மனசாட்சியைத் தொட்டு ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக நியாயம் கேட்கிறது

  • கவிஞர் இந்திரன், சென்னை

Vizhi.Pa Idayavendan’s collection of short stories, ‘Nandanar Theru’ around Dalits. As these stories are modelled on genres of both mass culture and intellectual culture, its Dalit aesthetic is same what diluted. Moreover, they also make it suited for left culture politics. Yet it is still possible that he may ultimately produce some good Dalit literature.”

  • Dr. Raj Gowthaman, Pondicherry

Reviews

There are no reviews yet.

Be the first to review “நந்தனார் தெரு”

Your email address will not be published. Required fields are marked *