Description
நூல் குறிப்பு:
கலைஞரின் படங்களில் கதையோடு சேர்ந்து சமத்துவமும் சகோதரத்துவமும் சமதர்மமும் இருந்தது என்கிறார் குமரன் தாஸ். அதனால் தான் கலைஞரின் படங்கள் அதிகமாக பயமுறுத்தியது. இவை மூன்றும் ஆதிக்கத்துக்கு எதிரானவை. ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட தனது எழுத்தைக் கருவியாகப் பயன்படுத்தினார் கலைஞர்.
சமூகநீதி, சுயமரியாதை, ஜாதி ஒழிப்பு ஆகிய அனைத்தும் திரை வசனங்களாக கலைஞரின் படத்துக்குள் எப்படி புதைந்து கிடந்தது என்பதை தோண்டி எடுத்து வந்து தருகிறார் குமரன் தாஸ். அவரது எழுத்துக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது. பல இடங்களில் வாசிக்கும் போது, படத்தை பார்ப்பது போல இருக்கிறது. அவருக்குள் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அவர் கொள்கை சொல்லியாகவும் இருப்பதால் சொல்லும் திறன் வாசிப்பாளனை ஈர்ப்பதாக இருக்கிறது.
ப. திருமாவேலன்
ஆசிரியர் குறிப்பு:
ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த குமரன்தாஸ், 16 வயதில் மூடநம்பிக்கைக்கு தனது தாயை பலி கொடுத்த துயரத்திலிருந்தே பகுத்தறிவு உணர்வை பெறத் தொடங்கினார். 80களில் பள்ளியாசிரியர் மூலம் மார்க்சிய லெனினியக் குழுக்களின் அறிமுகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய மக்கள் முன்னணியின் ஆதரவாளராக இருந்துள்ளார். பின்னர், இன்குலாப். இளவேனில், அ. மார்க்ஸ், கோ.கேசவன் ஆகியோரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, மா.லெ. குழுவில் இருந்து விலகி சமூக விஞ்ஞான பயிலகம் என்கிற பெயரில் நண்பர்களுடன் இணைந்து செயற்பட்டு ‘பகிர்வு’ எனும் சிற்றிதழை நடத்தியுள்ளார்.






Reviews
There are no reviews yet.