Description
ஆசிரியர் குறிப்பு
வே. மு. பொதியவெற்பன் 75 வயது கண்ட பவளவிழா நாயகன். நெல்லையில் பிறந்த அவர் சிறந்த கவிஞர், இலக்கிய திறனாய்வாளர், சிலிக்குயில் புத்தகப் பயணம் என்ற பதிப்பகத்தின் பதிப்பாளர். ‘முனைவன்’ என்ற சிற்றிதழை நடத்தியவர். ‘மணிக் கொடி’ இதழின் பொன்விழா மலரைக் கொண்டு வந்தவர். ‘நிறப்பிரிகை’ இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். பதினைந்திற்கும் மேற்பட்ட ஆய்வுகட்டுரைகளை எழுதியுள்ள இவர் ‘பறை’ தொகை நூலையும் வெளியிட்டுள்ளார்.
நூல் குறிப்பு
‘திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ நூல் காட்டும் எண்ணற்ற சான்றுகள் நூலாசிரியரின் ஆழ்ந்த படிப்பையும் கடும் உழைப்பையும் நமக்குணர்த்துகின்றன. ஒரு பக்கச் சார்புடையனவாக அல்லாமல் எல்லாத் தரப்பிலிருந்தும் தரவுகள் தரப்பட்டுள்ளன. இந்த ஒரு நூலைப் படித்து முடிக்கும் போது பல நூல்களைப் படித்த உணர்வு நமக்குள் எழுகிறது.
திராவிட இயக்க ஒவ்வாமை நோயினர் மீது மட்டுமன்றி, திராவிட இயக்கத் தலைவர்கள் மீதும் கூட அவருடைய கேலிகளும், கிண்டல்களும் சிலவிடங்களில் தலைநீட்டுகின்றன. கலைஞர் குறித்தும் அதுபோன்ற சில குறிப்புகள் காணப்படுகின்றன. மானுட வாழ்வில் மதவெளியின் வகிபாகத்தை மறுதலிக்கும் பகுத்தறிவின் பயங்காரவாத மரபு போன்ற நமக்கு உடன்பாடில்லாத வரிகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. இதனை நூலின் பதிப்பாசிரியர் நீலகண்டனே தன் பதிப்புரையில் குறிப்பிட்டு மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும் விரிந்து பரந்த தளங்களில் உரிய ஆவணங்கள் பலவற்றை முன்வைத்துள்ள அறிவாளர்கள் படிக்க வேண்டிய அரிய நூல் இதென்பதை யாரும் மறுப்பதில்லை.
- சுப. வீரபாண்டியன்
Reviews
There are no reviews yet.