Description
நூல் குறிப்பு:
கதை, கவிதை, நாவல் பரப்பில் இதுவரை காண்பிக்கப்படாத வட தமிழகத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும், பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாகும் தலித்துகளும், பெண்களுமே அழகிய பெரியவனின் உளப்பாங்கு மிக்க கதை மாந்தர்கள்.
வழக்காறுகளின் மொழி ஓர்மை பெரும்பாலும் சாதிக்குட்டையில் நாறித் தேங்கும். அல்லது நகரம்-கிராமம் என பழிப்புக் காட்டும். அவ்வாறான மனத்தடைகளற்ற பெரியவனிடம் மனிதப் பரிமாணங்கள் அழகியல் படிமங்களாயும், தமிழ் நீலிக் கதைகள் போன்று சிற்றறங்கள் சார்ந்த அமானுஷ்ய குறியீடுகளாயும் தேர்ந்தக் கதைகளாய் வெளிப்படுகின்றன.
பாத்திர சித்திர நேர்த்தியோடு கதையில் வந்து போகும் சின்னஞ்சிறிய பெண்கள் பென்னம் பெரிய உளவியற் தாக்கத்தையும் வசீகரத்தையும் பிரதியின் பெரும்வலியையும் நமக்குத் தருகிறார்கள்.
ஆசிரியர் குறிப்பு:
அரவிந்தன் என்ற இயற்பெயர் கொண்டவர் அழகிய பெரியவன். 1968 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த இவர் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பன்முகத் தன்மையில் எழுதி வரும் அழகிய பெரியவன் தமிழ் நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவர் ‘தகப்பன் கொடி’, ‘வல்லிசை’, ‘யாம் சில அரிசி வேண்டினோம்’, ‘சின்னக்குடை’ ஆகிய நாவல்களையும் ‘ஞாபக விலங்கு’, ‘நீ நிகழ்ந்த போது’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும், ‘தீட்டு’, ‘திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்’, ‘குறடு’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
Reviews
There are no reviews yet.