Description
ஆசிரியர் குறிப்பு
ஈழத்தில் பிறந்து குழந்தையாக இருந்த போதே அகதியாக தமிழ்நாட்டிற்கு தனது பெற்றோர்களால் அழைத்து வரப்பட்டவர். பின்னர் சிறு வயதில் ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து அங்கு வாழ்ந்து வருகிறார். தன்னை திருநங்கையாக அறிவித்துக் கொண்ட அவர் தன் குடும்பத்தினராலேயே துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவர். அதிலிருந்து மீண்டு தன்னை போன்ற திருநங்கைகளுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் தனுஜா, தனது கல்வியை கைவிடாமல் பல் மருத்துவம் சார்ந்த படிப்பை மேற்கொண்டு அவனமானப்படுத்திய இச்சமூகத்தில் கவுரமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்ந்து வருகிறார். அவரின் முதல் தன் வரலாறு இது.
புத்தகக் குறிப்பு :
நான் மலேசியாவில் இருந்த அந்த நாட்களில், என்னுடைய வாழ்க்கையைக் குறித்து என்னிடமே ஆயிரமாயிரம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன். இளமையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு முதுமையில் அநாதைகளாகத் தெருவில் கிடக்கும் திருநங்கைகளை மலேசியாவில் பார்த்தேன். மனநோயாளியைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஷீலாப் பாட்டியை அய்ரோப்பாவில் பார்த்தேன். எந்தவித அடிப்படை உரிமைகளுமற்று இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருநங்கைகளும், யாழ்ப்பாணத்தில் மறைந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் திருநங்கைகளும் எனக்கொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நான் ஈழத்தில் முளைத்திருந்தாலும் ஊன்றப்பட்டு வளர்ந்து நிற்கும் நிலம் ஜெர்மனி. நான் பலன் தருவதா அல்லது படுவதா என்பது என் கையிலேயேயுள்ளது. நீண்ட வேரில்லாவிட்டால் வீழ்ந்து போவேன்.
Reviews
There are no reviews yet.