Description
நூல் குறிப்பு:
காதலும் போராட்டங்களும் கனிந்ததொரு பருவங்களின் நினைவாகவும் விளைவாகவும் உள்ள கவிதைகள் இவை. மன்றலின் முறையீடுகள் மௌனா என்கிறப் படிமங்களாய் ஒரு பக்கமும், இருப்பின் எதிர்ப்பு தகிக்க ஜாதியை செவுளில் அறையும் போர்க்குண கவிதைகள் இன்னொருப் பக்கமுமென இலக்கிய இயக்கங் கொள்ள வைக்கிற எழுத்துகளிவை.
ஆசிரியர் குறிப்பு:
அரவிந்தன் என்ற இயற்பெயர் கொண்டவர் அழகிய பெரியவன். 1968 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த இவர் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பன்முகத் தன்மையில் எழுதி வரும் அழகிய பெரியவன் தமிழ் நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவர் ‘தகப்பன் கொடி’, ‘வல்லிசை’, ‘யாம் சில அரிசி வேண்டினோம்’, ‘சின்னக்குடை’ ஆகிய நாவல்களையும் ‘ஞாபக விலங்கு’, ‘நீ நிகழ்ந்த போது’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும், ‘தீட்டு’, ‘திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்’, ‘குறடு’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
Reviews
There are no reviews yet.