Description
ஆசிரியர் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்த கே. டானியல் தலித் இலக்கிய முன்னோடி. ‘பஞ்சமர்’, ‘கானல்’, ‘அடிமைகள்’, ‘தண்ணீர்’, ‘கோவிந்தன்’ ஆகிய நாவல்களையும், ‘சொக்கட்டான்’ என்ற நாவல் உள்ளிட்ட பல புனைவுகளுக்கு சொந்தக்காரர்.
நூல் குறிப்பு
மக்கள் எழுத்தாளர் கே. டானியலின் எழுத்துகளில் நூல் வடிவில் இதுவரை வெளிவராதவற்றை நூல் வடிவமாக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக 1984 ஆம் ஆண்டு காலத்தில் ‘வீரகேசரி’ வார வெளியீட்டில் இருபத்தைந்து ஞாயிறுகளில் வெளிவந்த இந்த ‘சொக்கட்டானை’ நாவலாக்கி உங்கள் கையில் தவழவிட்டதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
– டானியல் வசந்தன்
இது ஒரு யாழ்பாணத்து மண்ணின் கதை. பெருமையோடு சொல்வதானால் பாத்திரங்கள் யாவும் யாழ்ப்பாணத் தமிழையே மட்ட சுத்தமாகப் பேசுகின்றன.
செல்லப்பா, காமாட்சி அம்மாள், அழகி, முத்தையன் ஆகியவர்கள்தான் இந்த நாவலின் முக்கிய பாத்திரங்கள். இந்த நாவலின் உயிர் நாடிகளான இந்த நால்வரும் வாழ்க்கையைச் சொக்கட்டான் விளையாட்டாக ஆக்கிக்கொண்டதையே இந்தச் ‘சொக்கட்டா’னுக் கூடாக நீங்கள் காண்பீர்கள்.
தங்கள் தங்கள் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளும் விதத்தில் அந்தச் சொக்கட்டான் ஆடப்படுவதால் உடல் உணர்வுகள் சம்மந்தமான பகுதிகள் இதில் ஆங்காங்கே இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஆயினும், மிகவும் அவதானமாக நிதானமாக நாசூக்காக அந்த நிகழ்வுப் பகுதிகள் ஆளப்பட்டுள்ளன.
– கே.டானியல்
Reviews
There are no reviews yet.