Description
நூல் குறிப்பு:
பெண்கள் வெளி உருவாகாத இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற நேர்க்கோட்டில் நின்று ஜாதி, மதம், ஆணாதிக்கம் என்கிற தேசிய கருத்தாக்கங்களை அடித்து வீழ்த்திய பெண் போராளிகளின் எழுத்துகளும் பேச்சுகளும் அடங்கிய இரண்டாவது தொகுப்பு இது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மைச் சமூகம் என ஒடுக்கப்பட்ட பிரிவின் பெண்கள் பார்ப்பனியத்திற்கு எதிராக ஓர் அணியில் திரண்டதையும் உலகுத் தழுவிய பார்வைகளைக் கொண்டிருந்ததையும் சமகால பெண்ணிய செயல்பாட்டாளர்களுக்கும் செயலூக்க நம்பிக்கையை அளிக்கும் விதமாக தமிழ்ச் சமூகத்தின் முன் இந்நூலை வைக்கிறோம்.
ஆசிரியர் குறிப்பு:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர் முனைவர் மு. வளர்மதி. வழக்குரைஞர் அண்ணா. நாகரத்தினம் அவர்களை மணந்த இவருக்கு குறிஞ்சி என்ற மகள் உள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியலில் பட்டயம் பெற்ற இவர், முனைவர் பட்டமும் அந்நிறுவனத்திலேயே பெற்று, இணைப் பேராசிரியராக பணியாற்றினார். “மொழிபெயர்ப்புக் கலை”, “மானுட விடுதலை”, (இங்கர்சால் மொழிபெயர்ப்பு) ஆகிய இருநூல்களை முதல் வெளியீடுகளாகக் கொண்டு வந்தார். பின்னர் திராவிட இயக்க சிந்தனைக்குரிய தந்தை “பெரியார் சிந்தனைகள்”, “சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்” (தொகுதி 1, 2), “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்”, “அன்னை நாகம்மையாரும் தோழர் எஸ். ஆர். கண்ணம்மாளும்”, “பறை-இசைக்கருவி ஓர் ஆய்வு”, “இங்கர்சால் சிந்தனைகள்” ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பின், தற்போது பணி நிறைவு பெற்று சேலத்தில் வசித்து வருகிறார்.
Reviews
There are no reviews yet.