Description

ஆசிரியர் குறிப்பு:

இலங்கையின் அல்லைப்பிட்டி தீவில் பிறந்த தர்மினி உள்நாட்டுப் போரின் போது நாடு கடந்து அகதியாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதை தன்னாற்றலாய் கொண்ட தர்மினி சாவுகளால் பிரபலமான ஊர், இருள் மிதக்கும் பொய்கை, அயலால் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தன் கணவர் மற்றும் இரு மகன்களுடன் பிரான்ஸில் வாழ்கிறார்.

நூல் குறிப்பு:

‘வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்’ என படிமங்களைக் கையாள நேர்ந்த தேசத்திலிருந்து அகதிச் சுமையோடு புலம்பெயர்ந்தோடிக் கொண்டிருக்கும் பெண்ணின் பெருமூச்சையும், வழித்தடங்களையும் கவிதைகளாய் நம்முன் வைக்கிறார் தர்மினி. இலங்கைத் தீவினுள் இன்னொரு தீவான அல்லைப்பிட்டியிலிருந்து தப்பியோடி இறுதியாய் தஞ்சம் புகுந்து இதுவரை அகதியாய் ஏற்க மறுத்து வரும் பிரான்ஸ் தேசத்தில் தற்போது, அதற்கான போராட்டத்தையும் செய்து கொண்டு எழுத்தையும், வாசிப்பையும் வாழ்தலுக்கான உந்து விசையாய்த் தொடர்கின்றார் தர்மினி. நீண்ட தயக்கத்தின் பின் தம் முதல் கவிதை தொகுப்பை வெளியிடுகிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சாவுகளால் பிரபலமான ஊர்”

Your email address will not be published. Required fields are marked *