Description
புத்தகக் குறிப்பு :
கல்வெட்டு, செப்பேடு, இலக்கியப் பனுவல்களின் துணைக் கொண்டு பார்ப்பனியத்தை மறுத்தெழுந்து அடித்தள மக்களின் உண்மை வரலாற்றை எழுதி புதிய தடத்தை உருவாக்கியுள்ளது சக்கிலியர் வரலாறு எனும் இந்நூல். தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் சுயஜாதி வரலாற்றுப் போக்குகளிலிருந்து விலகி, ஆய்வு பூர்வமாகவும் தர்க்க அடிப்படையிலும் சான்றுகளோடு எழுதப்பட்டுள்ள வரலாறு இது.
காலந்தோறும் பார்ப்பன புளுகுனிகளின் வரலாறுகளை மட்டுமல்ல; வெள்ளாளர்கள் எழுதி வைத்துள்ள புளுகுனி வரலாறுகளையும் சேர்த்து உடைத்துதான் சக்கிலியர்கள் இம்மண்ணின் தொல்குடியினர் என்பதை கவிஞர் மதிவண்ணன் இந்நூலில் நிறுவிக் காட்டியுள்ளார்.
ஆசிரியர் குறிப்பு;
கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைக் குதிரை’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
சரண்குமார் லிம்பாலே அவர்களின் ‘தலித் பார்ப்பனன்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ‘ஓலம்’ என்கிற நாவலையும் தமிழக்கம் தமிழாக்கம் செய்துள்ளார்.
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் கொண்டு ஆவணங்களை உருவாக்கியவர்.
Reviews
There are no reviews yet.