Description
நூல் குறிப்பு:
கடந்த இருபதாண்டு ஈழத் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய நாவல். இயக்கங்கள், அரசாங்கங்கள் என்று இயந்திரகதியில் இயங்கும் ராணுவத் தளங்களுக்கு மத்தியில் தன் அடையாளங்களுக்காகப் போராடும் ஒருவனைப் பற்றிய நாவல்.
– டி.அருள்எழிலன், ஆனந்த விகடன்
ஆசிரியர் குறிப்பு:
ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர்.
சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.
நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.






Reviews
There are no reviews yet.