Description
நூல் குறிப்பு:
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.
நவீனத்துவம் என்கிற உலக இலக்கியங்கள் பயணித்த பாதையில் ஷோபாசக்தி முன் வைக்கும் கதைகள், இனவுரிமை முழக்கங்களையெழுப்பி தன்னை முன்னிறுத்திக் கொண்ட எந்தவொரு அரசியல் இலக்கியம் பதிவு செய்யாது நழுவிக் கொண்ட மனித வாழ்வை சித்திரங்களாய் கொண்டிருப்பவை. ஆன்மாவை பறித்துக் கொண்டு அம்மணத்தை பரிசளித்த இயக்கப் பெருமிதங்களை குலைத்த ரூபங்கள், கற்பு, ஆண்மை போன்ற தேச, தேசிய, தமிழ் ஜம்பங்களை விட்டு விலகி பயணிப்பவை.
ஆசிரியர் குறிப்பு;
ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர்.
சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.
நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.
Reviews
There are no reviews yet.