Availability: In Stock

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

Description

நூல் குறிப்பு:

புலப்பெயர்வில் இருந்தோ அல்லது தமிழகத்தில் இருந்தோ இல்லாமல் ஈழத்து களச் செயல்பாடுகளின் பின்புலத்தில் இருந்து இலக்கிய, அரசியல், சமூகப் போராட்டங்களை முன்னெடுத்தவர்களிடம் இருந்து தோழர் ஷோபாசக்தியால் பெறப்பட்டுள்ள நேர்காணல்கள் இது.

நாம் விதந்தோதிக் கொண்டிருக்கும் பிம்பங்களிலிருந்தும் பிரதிமைகளிலிருந்தும் சுய விமர்சனத்தோடு வெளியேறவும், புதிய திசைவழிகளை உருவாக்கி விவாதித்துச் செல்லவும், ஜனநாயகப் பண்புகளை கைக்கொள்ளவும் உதவும் வகையில் அமைந்துள்ள இந்நேர்காணல்களில் இருந்து ஈழச் சமூகத்தின் தேவைகளை, அரசியல் விருப்புணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியும் என நாம் கருதுகிறோம்.

ஆசிரியர் குறிப்பு;

ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர்.

சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.

நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்”

Your email address will not be published. Required fields are marked *