Description
ஆசிரியர் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கற்சுறா. தற்போது கனடாவில் வசித்து வரும் இவர் இலங்கையின் சாதி, தீண்டாமை எதிர்ப்புப் போராளி, எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள் என அனைத்தையும் தொகுத்தவர்.
நூல் குறிப்பு
ஒரு போராளியாகவே தன் எழுத்தியக்கத்தைத் தொடங்கிய ரகுநாதன் அவர்கள் அதிக தருணங்களில் சமூகத்தின் எதிர்த் திசையில் தன்னை நிறுத்தி எழுதி வந்திருப்பதனை அவரின் எழுத்துகளின் ஊடாக அனைவரும் கவனிக்க முடியும்.
தான் நம்பியிருந்த கருத்தியலை முன் நிறத்தி எழுத விழையும் பொழுது, அதனையும் கறாரான தொனியில் எழுதிவிடும் பொழுது மொழியின் தொனி கசந்த பலரை அவரிடம் இருந்து விலக்கி வைத்திருப்பதனை சந்தோசமாகவே ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறார்.
நான் அவரை நேரில் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் எழுத்தை மட்டுமல்ல; பேச்சையும் குறைத்திருந்தார். புதிதாக வாழக்கிடைத்த நாட்டின் அசமத்துவம் மட்டுமல்ல; ஈழ இலக்கியப் பரப்பில் புறக்கணிக்கப்பட்டே வந்ததும் கவனம் கொண்டே கவனியாது விடப்படுவதும் புறக்கணிக்கப்படுவதன் தொடர்ச்சியை தொடர்ந்தும் உணர்ந்து கொண்டதாலும் ஏற்பட்ட மனநிலையாகவே அது இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
“கந்தன் கருணை” நாடகப் பிரதியின் “மூலம்” தன்னுயைதுதான் என்று நிரூபிக்க அவர் இறுதி வரை கதை சொல்ல வேண்டியிருந்தது என்ற ஒன்றே அவரது மவுனத்தினைக் கணக்கிடப் போதுமானது.
தொகுப்பாசிரியர் கற்சுறா
Reviews
There are no reviews yet.