Description

நூல் குறிப்பு

பானுபாரதி மொழியாக்கம் செய்துள்ள பெண் கவிஞர்களின் கவிதைகளில் பல பெண்ணிய

அரசியல் கருத்துலகத்தை பின்புலமாகக் கொண்டவை. பெண்களின் அந்தரங்க உலகில் ஆண்கள்

நுழைந்து அதை கலைத்துப் போடுவதை பேசும் கவிதைகளும் இவற்றில் அடங்கும். இவை

தீர்மானகரமான அரசியலை பேசுவன அல்ல. விடுதலை அரசியலானாலும் அது

வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துபவையாகவே உள்ளன.

இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஆண் கவிஞர்களின் எழுத்தும் ஆராவாரமற்ற

எழுத்துகளாகவே உள்ளன. வலி என்ற தலைப்பிட்ட கவிதைகளாக இருக்கட்டும், ஒரு கோதுமை

மணியளவு உண்மையை தேடும் கவிதையாகட்டும் – இவையும், இவைப் போன்று வாழ்க்கை

அனுபவங்கள், மனத்தெளிவு நோக்கிய தேடல் ஆகியனவற்றை பேசும் கவிதைகளாக இருக்கட்டும்,

இவை வாசகருடன் உரையாடும் தொனியில், சன்னமான குரலில் பேசுவனவாக உள்ளன.

விடுதலை அரசியலை தேடும் பெண்ணிடம் “ஒடுக்குமுறையாளனின் நிழல் என் மீது படிந்துள்ளது”

என்று பாவ மன்னிப்பு கேட்கும் வார்த்தைகள் இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

காதலனை தோழமையான காதல் வாழ்க்கைக்கு அழைக்கும் பெண்ணாகப் பேசும் ஆணின்

சொற்களும் இங்குண்டு.

  • வ. கீதா

Reviews

There are no reviews yet.

Be the first to review “உன்னத சங்கீதம்”

Your email address will not be published. Required fields are marked *