Description
நூல் குறிப்பு:
கவிதை மனிதன் மனதின் குரல் நார்சியஸ் தனம். மார்க்ஸ் முல்லர் சொன்னது போல காதினோதீசம் போன்றோ அல்லது இன்னும் சொல்லாத பலவற்றைப் போன்றோ இருக்கும்/இருக்காது. இதன் வகை வேறு ஞாபகத்திலிருந்து உற்றுப் பார்ப்பவனின் காட்சி, கடந்த கால நிகழ்கால குரல்களில் ஹுத் ஹுத் பறவையைப் போல பலவற்றையும் கண்டு வந்து சொல்லுகின்றன. சொல்லுகின்ற சித்திரம் விரிகிறது. துணைக்கண்ட அரசியலின் அரசியலை இடைவெளியின்றி அவதானிக்கிறவனின் பயணத்தில் சமந்தாவை, லதாவை நேசமாக கடக்க இயலும். அகண்ட மார்புடையவனை அவ்வாறு கடப்பது சாத்தியமற்றது. நம்மை துவம்சிக்கும் ஒருவனை நோக்கி நம்மால் ஒரு கவிதையை ஆயுதமென வீச இயலுமென்றால் அதுவும் ஆறுதல்தானே
நான் பேச நாம் பேச நீங்கள் பேச நிறைய இருக்கிறது.
– மீரான் மைதீன்
பகடியும் பரிதவிப்பும் கவிதையின் புதிர் மனமும் கண் திறந்து பக்கத்திலமர்ந்து நம் புத்தரைப் போல பட்டவர்த்தனமாக பேசுகின்றன. உன்னதமுமில்லை; உன்மத்தமும் இல்லை. நல்கவிதையிருக்கிறது இத்தொகுப்பில்.






Reviews
There are no reviews yet.