Description
நூல் குறிப்பு:
உண்மையின்
பக்கத்திலிருக்கும்
நல்லதொருப் புனைவைப் போல்
இருளுடனான நீளக் கவியாடலை
நிகழ்த்திப் பார்க்கிறது
தர்மினியின் கவிதைகள்.
வெளிச்சத்தை எதிர்வாய்
கொண்டு
போர் புரிவதைத் தவிர்த்து
இருளைப் பிரிய மனம் ஒவ்வாத
தோழியாய், குழந்தையாய்,
மற்றுமொரு காதலாய்,
படிமங்களாய், ஆற்றலாய்,
புதியக் கட்டுமானங்களின்
பொறியமைவாய்
இயல்பில் எழும்
இக்கவிதைகளில்,
அகம் சார்ந்த முன்னெடுப்புகள்
இதுவரையிலான தடத்தில்
தம் பாதம் பதியாமல்
தனக்கான மொழியின் அலகில்
பயணத்தை மேற்கொள்கின்றன.
ஆசிரியர் குறிப்பு
இலங்கையின் அல்லைப்பிட்டி தீவில் பிறந்த தர்மினி உள்நாட்டுப் போரின் போது நாடு கடந்து அகதியாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதை தன்னாற்றலாய் கொண்ட தர்மினி சாவுகளால் பிரபலமான ஊர், இருள் மிதக்கும் பொய்கை, அயலால் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தன் கணவர் மற்றும் இரு மகன்களுடன் பிரான்ஸில் வாழ்கிறார்.






Reviews
There are no reviews yet.