Description

ஆசிரியர் குறிப்பு

இலங்கையின் மட்டக்களப்பில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் ஸர்மிளா செய்யித். தான் பிறந்த சமூகத்திற்குள்ளேயும் வெளியேயும் நடக்கும் அநீதிகளை படைப்பிற்குள் கொண்டு வந்து நீதி கேட்பவர் ஸர்மிளா செய்யித். ‘சிறகு முறைத்த பெண்’ என்ற கவிதைத் தொகுப்பையும், ‘இருசி’ என்ற சிறுகதைகள் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது துருக்கியில் வசித்து வருகிறார்.

நூல் குறிப்பு

ஆண்மயமாகிக் கிடக்கும் நமது தமிழிலக்கிய மொழியின் இருப்பை பாலின நீக்கம் செய்ய, சமத்துவப் பண்பாட்டு மொழியாக்க என படைப்பாக்க உள்ளீடுகளில், உளவியல் தன்மையோடு மாற்றங்களை உருவாக்கும் முயற்சிகள் தமிழிலக்கியத்தில் நடந்து வரும் மிக முக்கிய காலமிது. இதற்கான நேரடி சாட்சியாக ஸர்மிளா ஸெய்யித்தின் இச்சிறுகதைகளை சொல்லாம்.

நாம் வாசித்தறியாத சமூக மன இருப்பின் விகாரங்களையும் பரிதவிப்புகளையும் நெருக்கடிகளையும் எதிர்வினையாக எழும் மீறல்களையும் வாழ்வியலாக்க குவித்து வைத்திருக்கும் இக்கதைகள் ஆண் இருப்பு, மத இருப்பு, நவீன இருப்புகளின் மோதும் களங்களாகவும் முரண் கொள்ளும் மனங்களாகவும் இலக்கியச் சுவைக் குன்றாத நவ நவீன கதைகளாக தன்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இருசி”

Your email address will not be published. Required fields are marked *