Description

ஆசிரியர் குறிப்பு:

காஞ்சா அய்லய்யா, தற்போதைய தெலுங்கானாவில் உள்ள வாரங்கல்லில் 1952 இல் பிறந்தவர். உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி தற்போழுது ஓய்வு பெற்றுள்ளார். “மகாத்மா ஜோதிராவ் புலே” விருதை 2000 ஆம் ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய “அம்பேத்கர் சுடர்” விருதை 2021 ஆம் ஆண்டும் பெற்றுள்ளார்.

நூல் குறிப்பு:

ஆன்மிகப் பாசிசத்தின் (இந்து மதம்) உருவாக்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான் பின்நோக்கிப் பார்க்கிறேன். பாசிசம் என்றால் என்ன? ஒடுக்கும் தன்மையுடைய, அழிக்கக் கூடியது, உலகளாவிய எடுத்துக் கொண்டால், போருக்கு இட்டுச் செல்வது பாசிசம் என்று பிரதிகள் நமக்கு பாசிசம் பற்றிக் கூறுகின்றன. ஜெர்மனியிலிருந்தும், இத்தாலியிலிருந்தும் இது தோன்றியதாக நாம் அறிகிறோம். ஹிட்லரும், முசோலினியும் எடுத்துக்காட்டுகள். உற்று நோக்கினால், இந்து மதத்திற்கும் நாஜிக்களின் தத்துவத்திற்கும் ‘ஸ்வஸ்திக்’ சின்னம் உட்பட நிறைய தொடர்பிருக்கிறது.

ஹிட்லரே நாஜிக்களை ஆரியர்கள் என்றுதான் குறிப்பிட்டார். நான் இந்திய ஆரியர்களை நாஜிக்களோடு பொருத்திப் பார்ப்பேன். ஜெர்மனியில் ஆரியர்களுக்கு தொன்மையான வேர்கள் கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ளது. பார்ப்பனர்கள் ஜெர்மனியில் இருந்து வந்தார்களா அல்லது ஈரானிலிருந்தா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. பாசிசத்தின் தன்மைகளாக அடக்குவதையும் ஒடுக்குவதையும், போருக்கு இட்டுச் செல்வதையும், பாலியல் வல்லாங்கு செய்வதையும் வைத்துப் பார்க்கும் போது, இவையெல்லாம் ரிக் வேதத்திலும் இருக்கின்றன. ‘ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களை படைக்கிறார் கடவுள்’ என்கிறது ரிக் வேதம். இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம். அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவே இல்லையாம்! ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார்.

இந்நூலிலிருந்து

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்து ஆன்மிகமே பாசிசம்தான் – காஞ்சா அய்லைய்யா”

Your email address will not be published. Required fields are marked *