Description
ஆசிரியர் குறிப்பு
யாழ்ப்பாண மாகாணத்தின் வலிகாமத்தில் உள்ள சிற்றூர்களில் ஒன்றான ஆவரங்காலில் பிறந்தவர். தற்போது பிரான்ஸில் வசித்து வருகிறார். பிரான்ஸிலிருந்து வெளிவரும் ஆக்காட்டி இதழின் தொகுப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நூல் குறிப்பு
…பொன்ராசாவின் கதைக் கருக்கு ஏறக்குறைய ஒத்தக் கதையை புனைகிறார் கபில். கபிலோடு தர்மு பிரசாத்தையும் சேர்த்தே பார்க்க வேண்டி இருக்கிறது. சோபாசக்தி, கபில், தர்மு மூன்று பேரையும் ஒரே முக்கோணத்தில் வைத்து சுழற்றிப் பார்க்க உடலெது கதையெது என்று தெரியாமல் ஒன்றை ஒன்று மேவிக்கொண்டிருக்கினர். தர்மு பிரசாத்திடம் வலிமையான கதைகள் இருக்கின்றன. தன்னுள் தனித்து ஊறும் நிலமும் சொற்களும் இருக்கின்றன. களவாடப்பட்ட உடல்களுக்குள் வலிமையான இக்கதைகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தனிமையின் நூறாண்டுகளில் தண்டனைக்குட்படும் அக்கா, தமிழ்ச் சமூகத்தின் மொத்த பெண்ணுருவாய்த் தெரிகிறார். போர் பெண்களை வலிமையாக்கியது வரலாற்றின் பனியாய் என் பெண்கள் உருகொண்டார்கள். தனிமையின் நூறாண்டுகள் மூன்று கோடைகளாக விரிகிறது. என்றைக்குமே மாரியை பார்க்க முடியாத நிலத்தின் தனி மனிதப் பிறழ்வை, தனி மனித அழிவை திருகுவதன் மூலம் சமநிலையற்ற போர் விதிகளின் மீது தறிக்கெட்டாடும் மொத்த சமூகத்தின் பிறழ்வை மொழிக்குள் கொணர்கிறது. மோசஸ் மீளுயிர்க் கொண்டதும் அக்காவின் உயிர் எடுக்கப்படாமல் அந்தரத்தில் விடுத்துப் போனதும் கதைகளின் போக்கை ஆணுயிர், பெண்ணுயிர் என்று மொழிப்படுத்துகிறது. ஆனால் அவர்களின் உடல்கள் சோபாசக்தியின் சக்கைகளாகவே எனக்குத் தோன்றுகிறது…
Reviews
There are no reviews yet.