Description
நூல் குறிப்பு:
சமூக நீதி என்கிற பிரதிநிதித்துவ ஜனநாயக, கருத்தாக்கங்களின் அரசியல்களால் கண்டு கொள்ளப்படாமலும், புறக்கணிக்கப்பட்ட நிலையிலுமிருந்த, அருந்ததியர்களின் உரிமைக்குரலை, நீண்ட நெடியப் பெருமூச்சை, உள்ஒதுக்கீட்டிற்காக அமைக்கப்பட்ட நீதியாளர் ஜனார்த்தனம் குழுவின் முன், ஒரு சாட்சியத்தை போன்று முன் வைக்கும் இந்நூல், சமூகப் பொருளாதார வளங்களை பகிர்ந்தளிக்கும் நல அரசுகளின் சட்டமியற்றும் அவைகளிலிருந்து நீண்ட நெடு காலமாய் விலக்கப்பட்ட அருந்ததியர்களின் இருப்பையும் பேசுகிறது.
ஆசிரியர் குறிப்பு;
கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். வெள்ளைக் குதிரை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
சரண்குமார் லிம்பாலே அவர்களின் தலித் பார்ப்பனன் என்ற மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பையும் ஓலம் என்கிற நாவலையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
இருட்டடிக்கப்பட்ட அருந்ததிய மக்களின் வேர் கொண்ட இருப்பைப் பேசும் சக்கிலியர் வரலாறு எனும் ஆய்வு நூலை கல்வெட்டு, ஓலைச்சுவடி, இலக்கியப் பனுவல்களின் துணையோடு தமது 13 ஆண்டு கால ஆய்வுழைப்பில் உருவாக்கியுள்ளார்.
Reviews
There are no reviews yet.