Availability: In Stock

அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்

Original price was: ₹75.00.Current price is: ₹67.00.

Description

நூல் குறிப்பு:

மக்களின் சுயமரியாதைக்காக சிறை சென்ற இரு பெண் போராளிகளின் வரலாற்று நூல் இது. கள்ளுக்கடை மறியலை நடத்தி யார் இந்த பெண்கள் என கேட்கப்பட்டு, ஆங்கிலேயே ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை சந்தித்த நாகம்மையார் – கண்ணம்மையார் குறித்து இது வரை வெளிவராத வாழ்க்கைப் பதிவு இது.

பெரியாரின் உறவு நிலைகளாக மட்டுமே பொது நினைவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிற இரு பெண் ஆளுமைகளை குடும்பத்தைத் தாண்டி பார்ப்பனியத்தை எதிர்த்து சுயமரியாதைக்காக தங்களை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சமூக ஆளுமைகளாக வரலாற்றின் துணை கொண்டு நிறுவியுள்ளார் முனைவர் வளர்மதி.

ஆசிரியர் குறிப்பு:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர் முனைவர் மு. வளர்மதி. வழக்குரைஞர் அண்ணா. நாகரத்தினம் அவர்களை மணந்த இவருக்கு குறிஞ்சி என்ற மகள் உள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியலில் பட்டயம் பெற்ற இவர், முனைவர் பட்டமும் அந்நிறுவனத்திலேயே பெற்று, இணைப் பேராசிரியராக பணியாற்றினார். “மொழிபெயர்ப்புக் கலை”, “மானுட விடுதலை”, (இங்கர்சால் மொழிபெயர்ப்பு) ஆகிய இருநூல்களை முதல் வெளியீடுகளாகக் கொண்டு வந்தார். பின்னர் திராவிட இயக்க சிந்தனைக்குரிய தந்தை “பெரியார் சிந்தனைகள்”, “சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்” (தொகுதி 1, 2), “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்”, “அன்னை நாகம்மையாரும் தோழர் எஸ். ஆர். கண்ணம்மாளும்”, “பறை-இசைக்கருவி ஓர் ஆய்வு”, “இங்கர்சால் சிந்தனைகள்” ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பின், தற்போது பணி நிறைவு பெற்று சேலத்தில் வசித்து வருகிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்”

Your email address will not be published. Required fields are marked *