Description

நூல் குறிப்பு:

பொது மனிதராய் தன்னையுணர்ந்து கொண்டு ஒருவர் சமூக வெளியில் முதலில் எடுத்து வைக்கும் எழுத்து வடிவமாய் இருக்கும் கவிதைதான் இந்த மய்ய நீரோட்டத்தில் கடைசி பண்டமாக இருந்து வருகிறது. அதிலும் ஜாதியை எதிர்முரணில் வைக்கும் தலித் கவிதைகளோ கட்டக்கடைசி பண்டமாக அதாவது அசைவ உணவுகளில் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி பற்றி வராத சமையல் குறிப்புகளைப் போல

இந்த சனாதன அவல நதியில் மூழ்கி கறைபடிய விரும்பாத கவிதைகளுக்கு சொந்தக்காரர் என்பதாலேயே வளர்சிதை மாற்றம் என்ற ஒன்றைத் தவிர எந்தச் சிதைவும் இல்லாமல் தலித் இலக்கியப் போக்கிலும் தமிழிலக்கிய போக்கிலும் தனித்து மிளிரும் நடைதான் – மதிவண்ணன் கவிதைகளின் அடிப்படை பண்பு.

மய்ய, விளிம்பு, முற்போக்கு என தமக்குத் தாமே கீரிடங்களையும் பீடங்களையும் உருவாக்கிக் கொண்டு கவுரவித்துக் கொள்கிற சுயமோக மிக்க நார்ஸிச யுகத்தின் இந்தப் பத்தாண்டுகளில், தமது இருத்தலியல் மனப் போராட்டத்தை பிரவாகித்துக் கொண்டிருக்கும் பிளிறலும், உரைத்தலும், உவத்தலும் என எப்படி வகைப்படுத்திக் கொண்டாலும் கவிதையின் இயங்கியலில் அசாத்தியமானதொரு மொழியைக் கொண்டிருப்பதே மதிவண்ணனின் தலித்தியம், ஆமாம்! தலித்தியத்திற்குள் செழுமையுற்ற தலித்தியம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மதிவண்ணன் கவிதைகள்”

Your email address will not be published. Required fields are marked *