Description

நூல் குறிப்பு:

நாற்பதாண்டுகளாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இராணுவவாத ஆட்சியும் அதற்கெதிராக ஆயுதப் போராட்டங்களும் நடந்த ஈழ மண்ணில் சாதியத்திற்கு எதிராக மாண்பை மீட்கப் போராடி மீண்ட/தோற்ற வாழ்வியலை உயிரோட்டமாகப் பேசும் கே. டானியலின் பஞ்சமர் வரிசை நாவல்களில் இதுவும் ஒன்று.

ஈழத்தின் சாதி எதிர்ப்பு இடதுசாரியாகவும் போர்க்குணமிக்க தலித் இலக்கியப் பிதாமகராகவும் போற்றப்படுகின்ற கே. டானியல் அவர்களின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில் அவரது நாவல்களை, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டின் விளைச்சலில் உருவான கருப்புப் பிரதிகளின் வெளியீடுகளாக மீளச்சு செய்து தமிழக ஈழ – புகலிட மக்கள் முன் வைப்பதில் பேருவகை கொள்கிறோம்.

ஆசிரியர் குறிப்பு:

தலித் இலக்கியப் பிதாமகர் கே. டானியல் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைக் கிராமத்தில் 1927 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி பிறந்தார். சலவைத் தொழிலாளியின் மகனான இவர், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை வடபிரதேசத்தில் 1945 இல் தொடங்கி செயல்பட்டவர். ‘டானியல் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுதியை முதலில் வெளியிட்ட இவர்  ‘பஞ்சமர்’ நாவலை 1972 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். தொடர்ந்து அதன் வரிசையில் ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’, ‘கானல்’, ‘பஞ்சகோணங்கள்’, ‘தண்ணீர்’ ஆகிய நாவல்களையும் ‘சொக்கட்டான்’ என்ற குறுநாவல் ஒன்றையும் ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’ என்ற நாவலையும் அவர் எழுதினார். இவரது எழுத்துப் பணிகளுக்காக இலங்கைச் சாகித்திய மண்டல விருது பெற்றார். தமிழகத்தில் தங்கி இருந்து எழுத்துப் பணிகளோடு, கண் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவர்  1986 மார்ச் 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் இயற்கை எய்தினார். இலங்கையில் பிறந்த அவர்  தஞ்சை ராஜகோரி மயானத்தில் திராவிடர் கழகத் தளபதியான பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு அருகில்  துயில்கிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கோவிந்தன்”

Your email address will not be published. Required fields are marked *