Description

நூல் குறிப்பு:

குமரன்தாஸின் கட்டுரைகள் 90களில் எழுந்த தலித் அரசியலின் ஆதரவுக்குரலாக வெளிப்படுகின்றன. பிற்படுத்தப்பட்ட மனநிலைகளில் கவிந்துள்ள சாதியத்தை இவை மிகக் கடுமையாக எதிர்க்கின்றன. பார்ப்பனியத்தை சகல தளங்களிலும் அப்புறப்படுத்தக் கோருகின்றன. கண்டதேவி பிரச்சினை, மோகன் குழு அறிக்கை, உலகமயத்தினூடாக மிகுபடும் ஆணாதிக்கம் என தெறிப்பானதொரு விமர்சனத்தை முன் வைக்கும் குமரன்தாஸ் ராமேஸ்வரத்தில் பிறந்து தற்போது காரைக்குடியில் வசித்து வருபவர். ‘புதிய தடம்’, ‘உரிமைப் போராட்டம்’ இதழ்களின் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்காற்றியவர். இது அவரின் முதல் தொகுப்பு

ஆசிரியர் குறிப்பு:

ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த குமரன்தாஸ், 16 வயதில் மூடநம்பிக்கைக்கு தனது தாயை பலி கொடுத்த துயரத்திலிருந்தே பகுத்தறிவு உணர்வை பெறத் தொடங்கினார். 80களில் பள்ளியாசிரியர் மூலம் மார்க்சிய லெனினியக் குழுக்களின் அறிமுகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய மக்கள் முன்னணியின் ஆதரவாளராக இருந்துள்ளார். பின்னர், இன்குலாப். இளவேனில், அ. மார்க்ஸ், கோ.கேசவன் ஆகியோரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, மா.லெ. குழுவில் இருந்து விலகி சமூக விஞ்ஞான பயிலகம் என்கிற பெயரில் நண்பர்களுடன் இணைந்து செயற்பட்டு ‘பகிர்வு’ எனும் சிற்றிதழை நடத்தியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கற்பிதங்களின் தேசம்”

Your email address will not be published. Required fields are marked *