Description
நூல் குறிப்பு:
ஒரே பாடசாலை. ஒரே மைதானம். ஒரே விளையாட்டுகள் என நான் அறிந்திருந்த மனோ அல்ல இந்த நூலை எழுதியது. என் சமாந்தர வகுப்பிற் கற்ற மனோ விடம் இலக்கிய ஈடுபாட்டை நான் அப்போது அவதானித்திருக்கவில்லை. இளம் வயதில் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அதிகம் இலக்கிய வட்டங்களில் அறியப்படாமல் புலம்பெயர்ந்த பின் கலை இலக்கிய ஆர்வலர்கள் எல்லோராலும் அறியப்பட்டவர் மனோ. தனது படைப்புகளை முதன்மைப்படுத்தாத செயற்பாட்டாளராகவே பெரிதும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவராகவே அவரை நாம் காண முடியும். பிரான்ஸிலுள்ள மகாஜனப் பழைய மாணவர் சங்கம் ஏனைய பல பழைய மாணவர் சங்கங்களுக்கு முன்னுதாரணமானது. நாடக விழா, நாடகப் பிரதிப் போட்டி, கலந்துரையாடல்கள், வருடாந்த மலர் எனப் பல்வேறு முன்னுதாரணமானது. நாடக விழா, நாடகப் பிரதிப் போட்டி, கலந்துரையாடல்கள், வருடாந்த மலர் எனப் பல்வேறு நிகழ்வுகளில் மனோவின் முன்னெடுப்பும் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பெரியது. மனோவின் இலக்கிய ஆற்றல் வெளித்தெரியாதளவு மற்றோரை ஊக்கப்படுத்தி அவர்களது படைப்புகளைக் கொண்டு வருவதிலேயே அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்தது. கடந்த நூற்றாண்டின் பிற்கூற்றில் உலகின் எல்லா மூலைகளிலும் சிதறுண்ட ஈழத்துப் படைப்பாளிகள் புலம்பெயர் இலக்கியம் தமிழுக்கு வழங்கிய பங்களிப்பு முக்கியமானது என நிறுவினர். இக்காலப் பகுதியில் ‘ஓசை’ எனும் இலக்கியக் காலாண்டிதழை முதலிலும் ‘அம்மா’ எனும் சிறுகதைக்கான காலாண்டிதழை அதன்பின்னான காலங்களிலும் நேர்த்தியாக வடிவமைத்து வெளியிட்டவர் மனோ. இவையிரண்டும் புலம்பெயர் இலக்கிய இதழ்களில் மிக முக்கியமானவை. இலக்கிய ரசனையோடு அச்சுக்கலை, நூல் வடிவமைப்பு என்பன வாழ்வாகவும் அமைந்ததில் மனோவுக்கு இது இலகுவிற் சாத்தியமாகிற்று. எப்போதோ பரந்த வாசகர்களின் கைக்கு வந்திருக்க வேண்டிய மனோவின் படைப்புகளின் தொகுதி கொரானா வீடு இப்போதாவது வருகிறதே என மகிழ்கிறேன். வாசகர்களின் மனதிலும் அதே மகிழ்வு ஏற்படும் என நம்புகிறேன்.
இளவாலை விஜயேந்திரன்
ஆசிரியர் குறிப்பு:
மனோகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தன் தந்தையின் பெயரை இணைத்து மனோ சின்னதுரை என்ற பெயரில் சிறுகதைகளை எழுதி வருகிறார். 1961 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரில் படித்தவர். புலம் பெயர் சூழலில் இருந்து வெளிவந்த ஓசை, அம்மா ஆகிய இதழ்களின் ஆசிரியர். நாடக செயல்பாட்டில் ஆர்வம் கொண்ட இவர் பாரிஸ் நகரில் அச்சக மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மூன்று மகள்கள் மட்டும் இணையருடன் பிரான்சில் வசித்து வருகிறார்.






Reviews
There are no reviews yet.